
யாழில் ஆலய உப தலைவர் மீது கோடரியால் தாக்குதல்
யாழ்ப்பாணம் – அச்சுவேலி, உளவிக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கோடரியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை அச்சுவேலி – உளவிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
2 உந்துருளிகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பலொன்று கோடரி ஒன்றினால் குறித்த இளைஞரை தாக்கியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் பலத்த காயமடைந்த நிலையில், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்