கின்னஸ் சாதனை படைத்த காளை

உலகின் மிக உயரமான காளை என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்காவில் உள்ள காளை ஒன்று படைத்துள்ளது.

ரோமியோ என அழைக்கப்படும் குறித்த காளையானது 6 அடி 4.5 அங்குலம் உயரம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனை அமைப்பின் அறிக்கையின் படி இதற்கு முன்னர் குறித்த சாதனை டாமி என்ற காளையின் வசமிருந்தது. இந்த நிலையில் டாமி என்ற காளையை விட 3 அங்குலம் அதிக உயரத்துடன் தற்போது ரோமியோ புதிய சாதனை படைத்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்