சிறிலங்கன் ஏர்லைன்ஸை தனியார் மயப்படுத்தும் திட்டம்: 3 நிறுவனங்கள் இறுதிப்பட்டியலுக்கு தேர்வு

சிறிலங்கன் ஏர்லைன்ஸை தனியார் மயப்படுத்தும் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்த ஏலத்தாரர்கள் பட்டியலில் இருந்து மூன்று நிறுவனங்கள் தேர்வுக்காக இறுதிப்பட்டியலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

6 நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களை செய்திருந்த நிலையில், ஏர் ஏசியா, சுப்ரீம் குளோபல் மற்றும் ஹேய்லீஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி இலங்கையின் பொருளாதார நிலைப்படுத்தலுக்காக ஒத்துழைத்த இலங்கையரான ஆர்.எம் மணிவண்ணனின் தலைமையில் முன்னணி பல்துறை நிறுவனமான சுப்ரீம் கொன்சோடியம் இயங்குகிறது.

விமான போக்குவரத்துத்துறையில் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனமான ஏர்ஏசியா ஒரு மலேசியா நிறுவனமாகும்

இந்நிலையில் தெரிவு செய்யப்பட்ட மற்றைய நிறுவனமான ஹெய்லீஸ் இலங்கையின் உள்ளூர் பல்துறை நிறுவனமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க