
இலங்கை கிரிக்கட் வீரருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த கௌரவம்
இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் ரஸல் ஆர்னோல்டை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை கௌரவப்படுத்தியுள்ளதுடன் அவுஸ்திரேலியா கிரிக்கட்டின் பல் கலாச்சார தூதுவர்களில் ஒருவராக ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரரும், தற்போதைய கிரிக்கட் வர்ணணையாளருமான ஆர்னோல்ட் உள்ளிட்ட 54 பேர் இவ்வாறு தூதுவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டுத்துறையிலும் சமூகத்திலும் சாதக மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கிலான திட்டமொன்றை அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை முன்னெடுக்வுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வசீம் அக்ரம், உஸ்மான் கவாஜா, ரவி சாஸ்திரி, அலெனா கிங், ஸ்கொட் போலன்ட் போன்ற 54 பேர் இவ்வாறு தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்