பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

-அம்பாறை நிருபர்-

அண்மைக்காலமாக அம்பாறை நகரில் உள்ள சந்தை ஒன்றில் பொருட்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் 3 பெண்கள் தொடர்பில் தகவல்களை தந்துதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுள்ளனர்.

குறித்த மூன்று பெண்களும் அண்மைக்காலமாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பெண்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அம்பாறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு 0718593256, 0772921071 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அம்பாறை பொலிஸார் கோரியுள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க