முடி உதிர்வு

முடி உதிர்வு

முடி உதிர்வு

🔲ஒருவருக்கு முடி உதிர்கிறது என்றால், அது சாதாரண விஷயமல்ல. நம்முடைய தலைமுடி அளவுக்கு அதிகமாக உதிர்கிறது என்றால், நம் உடலில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதற்கான முதல்கட்ட அறிகுறியே முடி உதிர்தல் ஆகும்

திடீர் முடி உதிர்வுக்கான காரணங்கள்
  1. தூக்கமில்லாதபோது உடலில் செரட்டோனின் என்ற ஹார்மோன் சுரப்பு குறையும். அதன் விளைவாக முடி உதிர்வு அதிகமிருக்கும்.
  2. இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் முடி வளர்ச்சியை மெதுவாக்க உதவும் பிற தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உணவில் இல்லாதது.
  3. மன அழுத்தம் காரணமாக முடி உதிர்கின்றது.
  4. இப்போதெல்லாம் திடீர் திடீரென வானிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எப்போது வெயில் அடிக்கும், எப்போது மழை வரும் என்று கணிக்க முடிவதில்லை. அசாதாரண வானிலை மாற்றங்களாலும் முடி உதிர்வு ஏற்படுகிறது.
  5. பார்லர்களிலோஇ வீட்டிலோ அடக்கடி செய்துகொள்கிற கெமிக்கல் சிகிச்சைகளாலும் முடி உதிர்வு ஏற்படுகிறது.
  6. அடிக்கடி தலைக்கு குளிக்காவிட்டால் கூந்தலின் வேர்கால்களில் வியர்வையோடு அழுக்கும்இ வெளிப்புற மாசும் சேர்ந்துகொண்டு அடைத்துக்கொள்ளும். இதனால் பொடுகுத் தொல்லையும் வரும் இவையெல்லாம் சேர்ந்து முடி உதிர்வு உண்டாகும்.
  7. தலை முடியை வாராமல்இ சிக்கு எடுக்காமல் விட்டாலும் முடி உதிர்வு ஏற்படும்.
முடி அடர்த்தியாக வளர செய்யவேண்டியவை
  1. வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிப்பதாகும். இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.
  2. வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து உலர வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்.
  3. தினமும் 3-4 முறை தலைக்கு சீப்பை பயன்படுத்துங்கள். இதனால் மயிர்கால்கள் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
  4. உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
  5. வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.
  6. தினமும் போதிய அளவு தூக்கத்தை பின்பற்றி வாருங்கள். முடியின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
  7.  வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளித்தால் போதும்.
  8. காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வதோடு, தண்ணீரை அதிக அளவில் பருகுங்கள். இதனால் முடியின் வளர்ச்சியும், அடர்த்தியும் அதிகரிக்கும்.
முடி உதிர்வைத் தடுக்கும் உணவுகள்
  1. பயோட்டின் மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாக முட்டைகள் உள்ளன. முட்டையில் காணப்படும் இந்த கலவைகள் ஆரோக்கியமான மற்றும் வலுவான கூந்தலுக்கு உதவுவதோடு முடி உதிர்வு பிரச்னையையும் தடுக்கிறது.
  2. வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் கூந்தல் உதிர்வை தடுக்கும் ஒரு முக்கிய உணவு பொருளாக உள்ளது.
  3. ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் பயோட்டினின் சிறந்த மூலமாக சர்க்கரை வள்ளிக் கிழங்கு (Sweet Potato) உள்ளது.
  4. பீன்ஸ் வகைகள் பொதுவாக புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த உணவு பொருட்களாக காணப்படுகின்றன. பீன்ஸ்களில் காணப்படும் இந்த சேர்மங்கள் கூந்தல் உதிர்வை தடுப்பதோடு, ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
  5. சுவைமிக்க சூரியகாந்தி விதைகளில் துத்தநாகம், மக்னீசியம், பையோட்டின், வைட்டமின் பி, வைட்டமின் இ, புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், தாமிரம், கால்சியம், செலினியம் உள்ளிட்ட கூந்தல் உதிர்வை குறைக்கும் சத்துக்கள் காணப்படுகின்றன.
  6. இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாக பசலைக் கீரை உள்ளது. மேலும் இதில் காணப்படும் ஒமேகா-3 அமிலங்கள் உச்சந்தலை ஈரப்பதத்தை தக்க வைப்பதோடு, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
  7. முடி வளர்ச்சிக்கு தினமும் கறிவேப்பிலை அல்லது நெல்லிக்காய் அல்லது பீட்ரூட் ஜூஸ் குடிக்கவேண்டும்.
  8. புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தின் சிறந்த மூலமாக வால்நட்ஸ் உள்ளது. மேலும், கூந்தலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் ஃபோலேட் உள்ளடக்கமும் இதில் காணப்படுகிறது. எனவே, தினமும் 2-3 வால்நட்ஸினை ஊறவைத்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

முடி உதிர்வு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்