கோபத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகள்
🟥கோபத்தை அடக்குவதும் ஆத்திரத்தில் வெடிப்பதும் தனிப்பட்ட நிலையிலும் வெளி இடங்களிலும் பாதிப்பை உண்டு செய்யலாம். இது உங்கள் நல்வாழ்வையும் பாதிக்கலாம். உயர் இரத்த அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற உடல் உணர்ச்சி ரீதியான எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கலாம். ஆனால் நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்த முடியும். 2010 ஆம் ஆண்டு நடந்த ஆய்வின் படி கோபத்தை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்துவது இதய நோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கும் என்று கண்டறிந்துள்ளது. இப்போது உங்கள் கோபத்தை குறைப்பதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்ளமுடியும்.
📌கோபம் வரும் போது சுவாசத்தை சரியாக கவனிக்கமாட்டீர்கள். இந்த ஆழமற்ற பதட்டத்துடன் கூடிய சுவாசம் உங்களை இன்னும் ஆக்ரோஷமாக காட்டும். இதை எதிர்த்து போராட சுவாசத்தை கட்டுப்படுத்துங்கள் ஆழ்ந்து வயிற்றில் இருந்து சுவாசம் பெறுங்கள். இது உங்களை அமைதிப்படுத்தும்.
கோபம் அதிகமாக இருக்கும் போது உட்கார்ந்துகொண்டு வசதியாக இருங்கள். பிறகு மூக்கு வழியாக சுவாசியுங்கள். வயிறு மேல் எழும்பி வருவதை கவனியுங்கள். நாள் ஒன்றுக்கு 3 முறை 5முதல் 10 நிமிடங்கள் செய்து வந்தால் கோபமில்லாத மனிதர்களாக மாறமுடியும்.
📌கோப உணர்வு அதிகமாக இருக்கும் போது மகிழ்ச்சி தரும் விஷயங்களில் ஈடுபடுவது மனதை அமைதிப்படுத்த உதவும். கொதிக்கும் மனநிலையில் உடலையும் மூளையையும் அமைதிப்படுத்த படத்தை வரைய முயற்சிப்பது நல்லது.இதன் மூலம் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
📌ஆறுதல் தரும் மந்திரத்தை சொல்வதன் மூலம் அமைதியான சொற்றொடரை திரும்ப சொல்வது கோபம் விரக்தி போன்ற கடினமான உணர்ச்சிகளை எளிதாக்குகிறது.
📌சில நேரங்களில் அசையாமல் உட்காந்திருப்பதன் மூலம் உங்கள் கோபம் இன்னும் அதிக கவலையை உண்டு செய்யலாம். இந்த நேரத்தில் யோகா செய்வதன் மூலம் உடலை தளர்த்துவதன் மூலம் தசைகளில் பதற்றம் உண்டாகலாம். குறைந்தது சிறிய நடைபயிற்சி அல்லது சிறிது நடனமாட முயற்சி செய்வது கோபத்தை குறைக்கும்.
📌ஒரு நாளைக்கு பத்து நிமிடங்களாவது தியானம் செய்வதன் மூலம் மனம் அமைதி பெறும் உள்ளத்தில் தெளிவு உண்டாகும்.
📌அதீத உணர்ச்சி வெளிப்பாடு இருந்தால், அவசியம் மனநல ஆலோசகர் அல்லது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
📌உங்களைப் பற்றி சோசியல் மீடியாவில் தேவையில்லாத பேச்சுகள் மற்றும் கருத்துக்கள் வரும்போது எதையும் நீங்கள் கண்டுகொள்ளக்கூடாது. இதனால் கோபம் வரும் என்று நினைத்தால் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
📌அதிகமாகக் கோபப்படுபவர்கள்இ வேகமாக நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் செய்யலாம். இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் இதனால் கோபம் குறைவடையும்.
📌அலுவல்ரீதியாக வரும் கோபத்தையோ, பெரியவர்களிடம் கோபம் வந்தாலோ அதை நம்மால் வெளிகாட்ட முடியாது. அடக்கியும் வைக்கக் கூடாது. இதற்கு எளிய வழி ஒன்று இருக்கிறது. ஒரு பேப்பரில் அவர்களிடம் சொல்ல நினைக்கும் அனைத்து விஷயங்களையும் எழுதுங்கள். எழுதி முடித்ததும் ரிலாக்ஸாக இருப்பதாக உணர்ந்த பிறகு, பேப்பரைக் கிழிந்து எறிந்துவிடுங்கள்
கோபத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்