🔺மாணிக்கக் கல் என்பது இளஞ் சிவப்பு அல்லது அடர் சிவப்பு நிறத்திலுள்ளப் படிகக்கல்லாகும். இது நவரத்தினங்களுள் ஒன்று. இதன் சிவப்பு நிறம் குரோமியத்தால் ஏற்படுகிறது. ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோவின் உறுதி எண் முறையில் மாணிக்கத்தின் உறுதி எண் 9 ஆகும். இதை விட உறுதி எண் மிகுந்த படிகம் வைரம் ஆகும்.இதுவொரு நவரத்தினம் போன்ற மதிப்புமிக்க மிக விலை உயர்ந்த கல் உலகத்தில் மிகச் சிறிய எண்ணிக்கையில் தான் கிடைக்கிறது.
🔺பாம்பிற்கு காதுகள் கிடையாது என்பது நாம் அறிந்த விடயமாகும். ஆனால் அது நில அதிர்வுகளைக் கொண்டும்இ அதன் கண்களுக்குண்டான அகச்சிவப்பு கதிர்களை உணரும் திறனைக் கொண்டும் தன் இரையைத் தேடுவதற்கும்இ எதிரியின் நடமாட்டத்தை கண்டுபிடிக்கவும் பயன்படுத்துகிறது. அகச் சிவப்புக் கதிர்களை உணரும் திறன் அதன் தலையில் இருப்பதால், அது சிவப்பு நிறத்தில் இருக்கும் மாணிக்கக் கல்லை உமிழ்கிறது. அதனாலேயே மாணிக்கம் நாகரத்தினக்கல் எனவும் அழைக்கப்படுகிறது.
🔺தாய்லாந்து, கம்போடியா, ஆப்கானிசுத்தான் போன்ற நாடுகளில் மாணிக்கங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் உள்ளன. இலங்கையிலும் மாணிக்கங்கள் கிடைத்தாலும் நீலமே அதிகளவில் கிடைக்கிறது.
📍இரத்தினவியலின் படி, ரூபி எனப்படும் மாணிக்கம் கல் சூரியனின் ரத்தினமாக கருதப்படுகிறது. இதை மோதிர விரலில் அணிவது மங்களகரமானது. தங்க மோதிரத்தில் பதித்த இந்த ரத்தினத்தை அணியும் போது ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயத்திற்கு முன் அணியலாம்.
📍சூரியனுடைய பிரதிநிதி கல்லாக மாணிக்கம் உபயோகப்படுகிறது. சூரியனின் வீடான சிம்ம ராசியில் பிறந்தவர்களும் சூரிய திசை நடப்பில் உள்ளவர்களும், எண் கணிதப்படி 1,10,19, 28 ம் எண்ணில் பிறந்தவர்களும் மாணிக்க கல்லை அணிந்து கொள்வது நல்லது. இதனால் சூரியனுடைய கதிர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்