நாரைக் கொக்கு

நாரைக் கொக்கு

🔴இந்தியாவில், மஞ்சள் மூக்கு நாரை, செங்கால்நாரை, நத்தை குத்தி நாரை அல்லது அகலவாயன், பெருநாரை, கருங்கழுத்து நாரை உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட நாரை வகைகள் உள்ளன.

🔴இயற்கை படைப்புக்களில் மிகவும் அழகுடன்இ வித்தியாசமாக தோற்றமளிக்கும் நாரைப் பறவைகள் பொதுவாக ஒற்றைக் காலில் நீண்ட நேரம் நின்று ஓய்வெடுக்கும் தன்மை கொண்டது.

🔴பிரகாசமான இளஞ்சிவப்பு இறகுகளைக் கொண்ட நாரைகள் ஏனைய பறவைகளுடன் ஒப்பிடும் போது இயற்கையாகவே தலைகீழாக சாப்பிடும். மேலும் தலையை தனது முதுகில் வைத்துத் தூங்கும் இயல்புடையவை.

நாரைகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கான காரணங்கள்
  • நீண்ட நேரம் ஒற்றைக் காலில் நிற்பது நாரைகளின் தசைச் சோர்வைக் குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அதுமட்டுமன்றி ஏனைய பறவைகள் மற்றும் விலங்குகள் வேட்டையாட வரும்போது அதிலிருந்து தன்னைப் பாதுகாப்பதற்காக ஒற்றைக் காலில் நிற்கின்றது.
  • உடல் வெப்பநிலையை சமன் செய்வதற்காக ஒற்றைக் காலில் நிற்கின்றது என நம்பப்படுகிறது. அதாவது கால்கள் வழியாக வெப்பத்தை இழப்பதால் ஒரு காலை உடலுடன் நெருக்கமாக வைத்திருப்பதால் வெப்பநிலை சமப்படத்தப்படுகிறது.

🔴நாரைகள் தங்கள் நேரத்தின் பெரும்பகுதியை நீரில் செலவிடுகின்றன. அவைகள் பொதுவாக ஆபிரிக்காஇ தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் போன்ற வெப்பமான இடங்களில் காணப்படுகின்றன.நாரைகள் தூங்கும்போது முளையின் பாதி பகுதி விழிப்புடன் இருக்கும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்