பா ஓதல்

பா ஓதல்

🔷பா என்றால் பாடல் என்று பொருள். செய்யுள் கவிதை பாடல்களை பா என்று குறிப்பிடுவர் அத்தகு பாக்களின் வகைகளாக பாவினங்கள் உண்டு அவையே வெண்பா வஞ்சிப்பா ஆசிரியப்பா விருத்தம் என்பனவெல்லாம். ஒவ்வொரு பாவினங்களுக்கும் ஒரு அமைப்பு ஒரு இலக்கணம் உண்டு.

🔷அவற்றுள் வெண்பாவும் ஆசிரியப்பாவும் பெருவழக்குடையனவும் தெரிந்துகொள்ள வேண்டியனவும் ஆகும்.

வெண்பா

🔘ஈற்றடி முச்சீரும் ஏனைய அடி நாற்சீரும் பெற்று வரும். மாமுன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர் என்பனவாகிய வெண்பாத் தளைகளையே பெற்று வரவேண்டும். ஈற்றுச் சீர் ஓரசையாலோ, ஓரசையுடன் குற்றியலுகரமோ பெற்று முடிதல் வேண்டும். இவ் வெண்பா குறைந்தது இரண்டு அடிகளைக் கொண்டது.

🔘மேற்கண்ட இலக்கணங்கள் பொருந்த இரண்டடிகளில் வருவது – குறள்வெண்பா; மூன்றடிகளில் வருவது – சிந்தியல் வெண்பா; நான்கடிகளில் வருவது – இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா; ஐந்தடி முதல் 12 அடி வரை அமைவது – பஃறொடை வெண்பா; 12 அடிகளுக்குமேல் பல அடிகளைப் பெற்று வருவது – கலிவெண்பா என வகைப்படுத்துவர்.

🔘அவற்றுள் குறள் வெண்பாவும், நேரிசை வெண்பாவும் பயிலத்தக்க சிறப்புடையனவாகக் கருதப்படுகிறது.

ஆசிரியப்பா

🔘உரைநடை போன்று அமைவதே ஆசிரியப்பா. ஈரசைச் சீர்கள் நான்கு கொண்ட அளவடிகளால் அமைவது இது. எதுகைஇ மோனைகளால் சிறப்புப் பெறுவது. குறைந்தது மூன்றடிகளைப் பெற்று வரும். அடி மிகுதிக்கு எல்லை இல்லை.

🔘எல்லா அடிகளும் நாற்சீர் பெறுவது நிலைமண்டில ஆசிரியப்பா. சீரை மாற்றாமல் அடிகளை மாற்றிப் போட்டாலும் ஓசையும் பொருளும் மாறாதிருப்பது அடிமறிமண்டில ஆசிரியப்பா, ஈற்றடி முச்சீரும் ஏனைய அடிகள் நாற்சீரும் பெறுவது நேரிசை ஆசிரியப்பா, முதலடியும் ஈற்றடியும் நாற்சீர் பெற்றுஇ இடையிலுள்ள அடிகள் இரு சீரோ, முச்சீரோ பெற்று வருவது இணைக்குறள் ஆசிரியப்பா ஆகும். இவ்வாறு ஆசிரியப்பா நால்வகைப்படும்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்