80 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்

2ஆம் உலகப் போரில் ஜப்பானின் பல போர்க் கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவு 80 ஆண்டுகளுக்குப் பின்னர் தென் சீனக் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘யு.எஸ்.எஸ் ஹார்டர்’ என்ற குறித்த கப்பல் 1944ஆம் ஆண்டு ஓகஸ்ட் 29ஆம் திகதி 79 பேருடன் எதிரிப் படைகளால் மூழ்கடிக்கப்பட்டது.

பிலிப்பைன்ஸின் வடக்கு தீவான லூஸானை ஒட்டிய கடற்பகுதியில் 3,000 அடிக்குக் கீழே குறித்த நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2ஆம் உலகப் போரின் போது, ‘ஹார்டர்’ 4 நாட்களில் 3 ஜப்பானியப் போர்க் கப்பல்களை மூழ்கடித்ததாகவும், 2 கப்பல்களைப் பெருஞ் சேதத்திற்கு உள்ளாக்கியதாகவும் அமெரிக்கக் கடற்படை தெரிவிக்கின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்