8 நிமிடங்கள் மட்டுமே நீடித்த பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த வர்த்தகம் நேற்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு ஆரம்ப மாகிய போதிலும் 8 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

S&P SL 20 சுட்டெண் முந்தைய நாளை விட 5 வீதம் குறைந்ததன் காரணமாக பங்கு வர்த்தகம் சுமார் 30 நிமிடங்களுக்கு இவ்வாறு இடைநிறுத் தப்பட்டுள்ளது.

அதன்படி, பங்குச் சந்தையின் நாளாந்த வர்த்தகம் முற்பகல் 10.38 மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்டு, 11.08 மணிக்கு பங்குச் சந்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் அனைத்து பங்கு விலை குறியீடு 358.64 புள்ளிகள் சரிந்து 9,288.91 புள்ளிகளாகவும், S&P SL 20 சுட்டெண் 184.70 புள்ளி கள் சரிந்து 3,153.33 புள்ளிக ளாகவும் காணப்பட்டன.

இது முந்தைய நாளைக் காட்டிலும் 3.72மூ மற்றும் 5.53மூ வீழ்ச்சியாகும்.