7 குழந்தைகள் உட்பட 8 பேரை கடித்தே கொன்ற ஓநாய்

உத்தர பிரதேசத்தில் 7 குழந்தைகள் உட்பட 8 பேரின் உயிரிழப்புக்கு காரணமான ஓநாய்களில், ஒன்றை வனத்துறையினர் பிடித்தனர்.

உத்தர பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 7 குழந்தைகள், ஒரு பெண் என மொத்தம் 8 பேரை ஓநாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓநாய் கூட்டங்களால் சுமார் 30 கிராம மக்கள் தூக்கமின்றி தவித்தனர். இந்நிலையில், ஓநாய்களைப் பிடிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் வனத்துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கிராமத்திற்குள் 2 ஓநாய்கள் திரிவது டிரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் வனத்துறையினர் வைத்த கூண்டில் ஓநாய் ஒன்று சிக்கியுள்ளது. 30 கிராம மக்களை அச்சுறுத்திய ஓநாய்களில், எஞ்சியவற்றை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்