கம்பஹா மாவட்டம் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்பொல பிரதேசத்தில் கோடாவுடன் இளைஞன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளான்.
கிரிந்திவெல, பெபிலியவல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இதன்போத கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிந்திவெல பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களிடமிருந்து 1,080 லீற்றர் கோடா (6 பீப்பாய்கள்) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.