
புதையல் தோண்ட முயற்சித்த 5 பேர் கைது
கிளிநொச்சி – இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் கிளிநொச்சி அழகாபுரி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கைதானவர்கள் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய கருவிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி, இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்