
5 வர்த்தக நிலையங்களுக்கு சட்டநடவடிக்கை
-மூதூர் நிருபர்-
மூதூர் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகரின் தலைமையில் மூதூர்- பொது சுகாதார பரிசோதகர் பகுதியில் நேற்று உணவகங்கள், பலசரக்கு நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதர்களால் நேற்று சனிக்கிழமை மாலை பரிசோதனை செய்யப்பட்டன.
இதன்போது உணவு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டதுடன் பூச்சி தொற்றுக்குள்ளான, திகதி காலவதியான மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு 05வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்