5 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் 5 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 5 மாடி கட்டடம் திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது.

அத்துடன் இதன்போது சுமார் 7 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.