5 பெண் பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அருகாமையில் நின்ற மரத்தின் கிளைகளை வெட்டியவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து சிவலிங்கம் (வயது 62) என்ற 5 பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கீழே விழுந்து உயிரிழந்த பின்னர் அவரது சடலம் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்