4,860 ரூபாவாக எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று  செவ்வாய்க்கிழமை நள்ளிரவு   முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5kg சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 4,860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், இதற்கு முன்னர் ரூ. 2,675 ஆக இருந்த 12.5kg சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 2,185 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 5kg, 2.3kg சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாய சிலிண்டர்களின் புதிய விலைகள்

12.5kg: ரூ. 2,675 இலிருந்து ரூ. 4,860 ஆக ரூ. 2,185,  5kg: ரூ. 1,071 இலிருந்து ரூ. 1,945 ஆக ரூ. 874 , 2.3kg: ரூ. 910 இலிருந்து ரூ. 910 ஆக ரூ. 404 என்றவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.