48 மணி நேரத்தில் 15 பேர் கைது

-பதுளை நிருபர்-

பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பதுளை பொலிஸாரும் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் 48 மணிநேர விசேட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்களுக்காக 15 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1210 மில்லிகிராம் ஐஸ் 155 மில்லிகிராம் ஹெராயின், 9220 மில்லிகிராம் கஞ்சா, 5750 மில்லி லீட்டர் கசிப்பு, 1470 மில்லிகிராம் மாவா 3750 மில்லி லிட்டர் சுக்கு, 330,000 மில்லி லிட்டர் கோடா போன்றவற்றையும் பொலிஸாரும் அதிரடிப்படையினரும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி பிற்பகல் தொடக்கம் 7ஆம் திகதி வரை இந்த இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய 10 சந்தேகநபர்களும், 03 பிடியாணையாளர்களும், 02 மதுபோதையில் சாரதிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உபுல் சந்தன, பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த, பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர மற்றும் பதுளை பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி சர்மிந்த பிரியந்த ஆகியோர் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு, பசறை ஆக்கரத்தன்ன பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் தலைமையக அதிகாரிகள். இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்