
ஹபரண-பொலன்னறுவை பிரதான வீதியில் விபத்து 40 பேர் படுகாயம்
ஹபரண-பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரியாவில் உள்ள மினிஹிரிகமவில் இன்று வியாழக்கிழமை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது 40 பயணிகள் படுகாயமடைந்தனர்.
கொழும்பு-கதுருவெல பிரதான வீதியில் சேவையில் ஈடுபட்ட பேருந்துந்துக்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை மற்றும் ஹிங்குராக்கொட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.