திருகோணமலையிலிருந்து டீசல் ஏற்றி வந்த கொள்கலன் ஒன்று வீதியை விட்டு விலகி குடை சாய்ந்ததில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹப்புத்தளை ஐ.ஓ.சி எரிபொருள் களஞ்சியசாலைக்கு 33000 லீற்றர் டீசல் ஏற்றுக்கொண்டு திருகோணமலையில் இருந்து பயணித்த குறித்த பௌஸர் ஹப்புத்தளை நகர் பகுதியில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் கொள்கலனில் இருந்த டீசல் வீதியில் வழிந்தோடியமை குறிப்பிடத்தக்கது.

