யாழ்ப்பாணத்தில் சீட்டு காசு கொடுக்காததால் குடும்பஸ்தர் ஒருவர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – உடுவில் நாகம்மாள் கோவிலுக்கு அருகாமையில் வசிக்கும் பெண்ணொருவர், சீட்டு பிடிக்கும் தொழிலை செய்து வருகிறார்.
ஆலடி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும், குறித்த பெண்ணிடம் சீட்டு கட்டி வருகிறார். இந்நிலையில் குறித்த நபருக்கு சீட்டு விழுந்துள்ளது.
சந்தேக நபரான குறித்த நபருக்கு சீட்டு விழுந்துள்ள போதும் அவருக்கு சீட்டு பணம் கொடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த குறித்த நபர், சீட்டு பிடிக்கும் பெண்ணின் கணவரை கடத்திச் சென்று கொடூரமாக தாக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் மற்றும் அவருடன் இணைந்து தாக்குதல் நடத்திய குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை தாக்குதலுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.