ஜனவரி மாதம் முதல் பல்வேறு குற்றங்கள் காரணமாக சுமார் 300 பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் சுமார் 200 பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .
சில அரச ஊழியர்களின் செயல்களால், முழு அரச சேவையின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர்வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு குற்றங்களைச் செய்ததாக நிரூபிக்கப்பட்ட பின்னர், சில ஊழியர்கள் 25 வருடங்களாக அரச சேவையில் பணியாற்றிய போதும் , மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகளை இழந்துள்ளனர் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார் .
தற்போதைய அரசாங்கம் தவறு செய்பவர்களை அவர்கள் பதவிகளில் இருந்தபோதிலும் தண்டிக்கத் தயங்காது என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால வலியுறுத்தியுள்ளார் .