30வயது இறந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை வேண்டும்

மணப்பெண், மணமகன் வேண்டும் என்று செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுப்பதை நாம் வழமையான விளம்பரமாக பார்த்திருப்போம் , இது இவ்வாறு இருக்க இந்தியா கர்நாடகாவில் வினோத சம்பவம் சிலதினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது.

இறந்த பெண்ணை திருமணம் செய்ய இறந்த ஆண் வேண்டும் என்று செய்தித்தாளில் வெளிவந்த விளம்பரம் தான் அது தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது.

இந்தநிலையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த அந்த பெண் குழந்தைக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்துள்ளனர் நீண்ட நாட்கள் தேடியும் மாப்பிள்ளை கிடைக்காததால் அவர்கள் பத்திரிகையில் விளம்பரம் ஒன்றை கொடுத்தனர்.

‛‛இறந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை வேண்டும்’’ என அந்த விளம்பரத்தின் தலைப்பில் எழுத்தப்பட்டிருந்தது.

இந்த விளம்பரத்தை சிலர் வரவேற்ற நிலையில், இன்னொரு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து, மூடநம்பிக்கை என விமர்சனமும் செய்தனர்.

இது ஒருபுறம் இருக்க இந்த விளம்பரத்தை பார்த்து 50 பேர் வரை தொடர்பு கொண்டு வரன்கொடுக்க முன்வந்ததாக பெண் வீட்டார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப உறுபினர் ஒருவர் இறந்தாலும் கூட அந்த நபர் தங்களின் குடும்பத்துடனே வசிப்பதாக நம்புகின்றனர். இதனால்தான் திருமணத்துக்கு முன்பே குடும்பத்தில் யாரேனும் இறந்தால் அவர்களுக்கு முறைப்படி திருமணம் செய்து வைப்பதை இவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

கர்நாடகாவின் துளுநாடு என அழைக்கப்படும் புத்தூர் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது இங்கு இறந்த நபர்களுக்கு திருமணம் செய்து வைப்பது காலங்காலமாக நடக்கும் ஒரு நிகழ்வாக இருக்கிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்