குளவி கொட்டுக்கு இலக்கான 30 மாணவர்கள்

-மூதூர் நிருபர்-

மூதூரில் நேற்று செவ்வாய்க்கிழமை குளவி கொட்டியதில் 30 மாணவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூதூர் அப்துல் மஜீத் வித்தியாலயத்திற்கு மாலை நேர வகுப்பிற்கு சென்ற மாணவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கானதுடன் ஆசிரியர் ஒருவரும் குளவி கொட்டுக்குள்ளாகி உள்ளதாகவும் தெரிய வருகிறது.

குறித்த பாடசாலையின் தரம் 5 மாணவர்களே இதன் போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்