கஞ்சா செடிகளுடன் மூவர் கைது

-பதுளை நிருபர்-

புத்தல-கோணஹங்கார பொலிஸ் பிரிவில் 112,500 கஞ்சா செடிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோணஹங்கார பொலிஸார் தெரிவித்தனர்.

கோணஹங்கார பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்மடஹடல யால வனப்பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக புத்தல விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய படையினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது பயிரிடப்பட்ட 112,500 கஞ்சா செடிகளை மீட்டுள்ளனர்.

42,42,48 வயதுடைய எம்பிலிபிடிய பகுதியைச் சேர்ந்த ஒருவரும் தனமல்வில பகுதியைப் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மூவரையும் கோணஹங்கார பொலிஸ் நிலையத்தில் விஷேட அதிரடி படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சந்தேக நபர்களை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கோணஹங்கார பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க