வெளிநாட்டினருக்கான இலங்கையின் விசா நீட்டிப்பு செயல்முறையை, இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு குடும்பம் ஒன்று கடுமையாக விமர்சித்துள்ளது, “இதுவரை காணாத மிகவும் வேதனையான அனுபவம்” என்று இச்சம்பவத்தை அவர்கள் விபரித்துள்ளனர்.
டிக்டொக்கில் “தி ஹட்சின்சன்ஸ்” என்று அழைக்கப்படும் நபர், விசா இல்லாத திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வந்து, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் தமது விசாவை நீடிக்க முயன்றுள்ளனர்
இருப்பினும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான ஒழுங்கான நடைமுறை இல்லாததால், விசா நீட்டிப்பு அனுபவம் மிகவும் மோசமான அனுபவமாகிவிட்டதாக அவர்கள் டிக்டொக்கில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
@thehutchinsons Wow what a tough day at the immigration office in Colombo Sri Lanka! This definitely wasn’t worth the hassle for an extra week here 😫 anyway, all sorted and time to enjoy Christmas 🎄 #thehutchinsons #immigration #visa #christmas #nightmarebeforechristmas