கொழும்பு யூனியன் பிளேஸில் உள்ள கட்டிடத்தின் 08வது மாடியில் இருந்து தவறி விழுந்து சீன பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடமொன்றில் உதவி பொறியாளராகப் பணியாற்றிய 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில் மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கட்டிடத்திலிருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கீழே விழுந்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த சீனப் பிரஜை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.