மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் எருவில் தெற்கு இளைஞர் கழகத்தினால் தூய்மையான பசுமையான சூழலை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளில் 200 நிழல் தரும் மரங்களை நடும் செயற்பாடு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இளைஞர் கழக தலைவர் செல்வன் இ. குஜாந்துஜன் தலைமையில் அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தில் இறை வழிபாட்டுடன் நிகழ்வு ஆரம்பமானது.
நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் த.சபியதாஸ் மற்றும் ச.பேரின்பநாயகம் தலைவர் கமநல அமைப்பு, பூ.சண்முகநாதன் (அதிபர்) செயலாளர் அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம், மா.சுந்தரலிங்கம் தலைவர் கண்ணகி அம்மன் ஆலயம், சோ.தினகரன்பிள்ளை மணியகாரர் கண்ணகி அம்மன் ஆலயம், கி.குமாரசிங்கம் வண்ணக்கர் கண்ணகி அம்மன் ஆலயம், க.அருள்ராசா செயலாளர் கண்ணகி அம்மன் ஆலயம், இ.பரந்தாமன் பொருளாளர் கெளரி அம்மன் ஆலயம் , கமல்ராஜன் பொருளாளர் கண்ணகி விளையாட்டு கழகம், இ.குகதீசன் செயலாளர் கண்ணகி விளையாட்டு கழகம், சு.துசியந்தன் தலைவர் உதய நிலா கலைக் கழகம், ச.ரகுபதி ஆலோசகர் இளைஞர் கழகம், சத்தியசீலன் ஆலோசகர் இளைஞர் கழகம், லோ.சுரேஸ்காந் இளைஞர் கழக ஆலோசகரும் 20 மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம், உழவர் சிலை, கண்ணகி அம்மன் ஆலயம், மட்/பட்/கண்ணகி மகா வித்தியாலயம், கெளரி அம்மன் ஆலயம், பொது விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் 145 மரங்கள் நடப்பட்டது.



