-வவுனியா நிருபர்-
வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
சாந்தசோலை பகுதியை சேர்ந்த சுப்பையா ஆனந்தன் (வயது – 40) என்ற குடும்பஸ்தரே இதன் போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
பசார்வீதியில் அமைந்துள்ள நகைபட்டறை ஒன்றில் தொழில் புரிந்துவரும் குடும்பஸ்தர் நேற்று திங்கட்கிழமை இரவு வீட்டிலிருந்து தொழில் நிமித்தம் கடைக்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் அவரது சடலம் பட்டறை அமைந்துள்ள மாடிகட்டடத்தின் கீழ் தளத்தில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டது.
அவர் மாடிக்கட்டடத்தில் இருந்து தவறி வீழ்ந்ததால் மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
