213 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்-

213 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் யாழ்ப்பாணம் மீசாலை பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

51ஆவது படைப்பிரிவு இராணுவமுகாமைச் சேர்ந்த புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக, காரைநகர் பகுதியில் வைத்து சாவகச்சேரி – மீசாலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் பெருமளவான கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையின் போது, 213 கிலோ 800 கிராம் எடையுடைய கஞ்சா மற்றும் ஒரு படகு என்பன மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் சான்றுப் பொருட்களுடன், ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்