அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும், குறித்த திருத்தச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அவர் தெரிவித்தார்.