2024 ஒலிம்பிக் விழாவிற்கான சுடர் ஏற்றப்பட்டது
2024 பாரிஸ் ஒலிம்பிக் விழாவிற்கான சுடர், புராதன ஒலிம்பிக்கின் பிறப்பிடமான கிரேக்கத்தின் ஒலிம்பியா நகரில் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பக் உள்ளிட்ட பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நவீன ஒலிம்பிக் விழாவின் போது சுடரை பேரணியாக ஏந்திச்செல்லும் வழமை 1936ஆம் ஆண்டு, ஜெர்மனியின் பேர்ளின் ஒலிம்பிக் விழாவின் போது ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அதன்பின்னர் ஒவ்வொரு ஒலிம்பிக் விழா ஆரம்பமாவதற்கு முன்பும் கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, பேரணியாக எடுத்துச் செல்லப்பட்டு விழாவை நடத்தும் நாட்டிடம் ஒப்படைக்கப்படும்.
இந்த நிலையில், இவ்வாண்டுக்கான சுடரை கிரேக்கம் முழுவதும் 5,000 கிலோமீற்றர்களுக்கு 11 நாட்களாக 600 பேர் ஏந்திச் செல்லவுள்ளனர்.
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் ன்டோஸ்கோஸ் (Stefanos Ntouskos) ஒலிம்பிக் சுடர் பவனியை ஆரம்பித்து வைத்துள்ளார்.
ஒலிம்பிக் சுடர் இம்மாதம் 26ஆம் திகதி பிரான்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டு, பாரிஸ் ஒலிம்பிக் விழா ஏற்பாட்டுக் குழுவினரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்