-கிண்ணியா நிருபர்-
பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகிய தந்தையை இழந்த மாணவருக்கும் கல்வியைத் தொடரப் பணவசதி அற்ற மாணவருக்குமாக மொத்தம் 60 மாணவருக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சியும் நேற்று சனிக்கிழமை திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் நடத்தப்பட்டது
இதற்கான நிதி உதவியைக் கனடாவில் உள்ள திருகோணமலை நலன்புரிச் சங்கம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடை பெற்ற மேற்படி விழாவில்இ கிழக்கு மாணக் கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் தலைமை விருத்தினராகக் கலந்து கொண்டார். .இவரோடு வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் கோட்டக் கல்வி அதிகாரிகள் இபாடசாலை முதல்வர்கள் இஆசிரியர்கள்.திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்க நிருவாகிகள்இபெற்றார் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

