போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 95 ஆயிரம் பேர் கைது

2021ஆம் ஆண்டு முதல் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 95 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பிரதி பொலிஸ்மா அதிபரும் சிரேஷட பொலிஸ் ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

விசேட காணொளிப் பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், ‘இதன்போது 1,630 கிராம் ஹெரோய்ன், 15,000 கிலோ கஞ்சா என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேபோன்று 377 கிலோ நிறையுடைய ஏனைய போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த வருடத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இது வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் சுற்றிவ ளைப்புகளில் 800 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 360கிராம் ஹெரோயின், 2,100 கிலோ கஞ்சா, 18 கிலோ நிறையுடைய ஏனைய போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.