20 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை

வெல்லவாய, வருணகம மற்றும் கொட்டவெஹெரகல வன பகுதியில் ஏற்பட்ட தீயினால் இருபது ஏக்கருக்கும் அதிகமான காணி எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் நிலவும் கடும் வறட்சியான வானிலை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக வனப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தீ பரவியுள்ளது.

எனினும், வன பாதுகாப்பு அதிகாரிகள், வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த வனப்பகுதியில் யாரோ தீ வைத்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுவதால் சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க