2.87 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப் பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்ற இந்தியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் 24 வயதான இந்தியர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த நபர் தாய்லாந்தின் பாங்காக்கில் போதைப்பொருளை வாங்கி, மலேசியாவின் கோலாலம்பூருக்குப் பயணம் செய்த பின்னர் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் ஆர்-179 மூலம் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
சோதனையின் போது, அவரது பயணப் பெட்டியில் இருந்த ஒரு அட்டைப் பெட்டியின் பக்கவாட்டுப் பலகைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோகிராம் மற்றும் 87 கிராம் “குஷ்” கஞ்சாவை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்கவில் உள்ள விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
