18,753 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை

ஸ்கை பேஸ்ட் ஜம்ப்பிங்கில் (ski-based jumping) பெரசூட்டின் உதவியுடன் 18,753 அடி உயரத்திலிருந்து குதித்து பிரித்தானிய வீரர் ஒருவர் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு 14,301 அடி உயரம் பறந்து சாதனை படைத்ததே சாதனையாக இருந்தது.

குறித்த சாதனையை தற்போது 34 வயதான ஜோசுவா ப்ரெக்மேன் பிரித்தானிய வீரர் முறியடித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்படும் நேபாளத்தில் மனிதக் கடத்தல் பிரச்சனை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தொண்டுக்காக நிதி திரட்டவும் அவர் இந்த சவாலை ஏற்றுக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்