கொழும்பு ஃப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் 18 பேர் கொண்ட புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று வெள்ளிக்கிழமை சத்திய பிரமாணம் செய்துகொண்டனர்.
இன்று பிற்பகல் ஒரு மணியளவில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.
பிரதமர் தினேஸ் குணவர்தன – அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர்
கடற்றொழில் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா
கல்வி அமைச்சர் – சுசில் பிரேமஜயந்த
போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் – பந்துல குணவர்தன
சுகாதாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் – கெஹலிய ரம்புக்வெல்ல
விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்புத்துறை அமைச்சர் – மஹிந்த அமரவீர
நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் – விஜேதாஸ ராஜபக்ஷ
சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் – ஹரின் பெர்னாண்டோ
பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர் – ரமேஷ் பத்திரன
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க
வெளிவிவகார அமைச்சர் – அலி சப்ரி
பௌத்த சாசனம், சமய அலுவல்கள் மற்றும் கலாசார விவகார அமைச்சர் – விதுர விக்ரமநாயக்க
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் – கஞ்சன விஜேசேகர
சுற்றாடல் அமைச்சர் – ஹாபிஸ் நஷீர் அஹமட்
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் – ரொஷான் ரணசிங்க
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் – மனுஷ நாணயக்கார
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் – டிரான் அலஸ்
வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சராக நளின் ருவன்ஜீவ பெர்னாண்டோவும் பதவியேற்றுள்ளனர்.