18 வயதுக்கு மேற்பட்டோர் உடற்பயிற்சியில் ஈடுபடுமாறு ஆலோசனை

தொற்று அல்லாத நோய்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தொற்றா நோய்களுக்கான பணிப்பாளர் சபையின் சமூக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரில் பாலசூரிய இதனைத் தெரிவித்தார்.

இதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM