ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

 

வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்கான மேலதிக ரயில் சேவைகள் இன்று ஞாயிற்று கிழமை பிற்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் நந்தன இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்றும் நாளையும் பதுளை, காலி மற்றும் பெலியத்தை ரயில் நிலையங்களில் இருந்து கொழும்பு கோட்டை வரை 8 மேலதிக ரயில் சேவையில் இயக்கப்படவுள்ளன.

இது தவிர நாளை மறுதினம் 16ஆம் திகதி முதல் அலுவலக ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்