17 ஆயிரம் லீற்றர் எரிபொருளுடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 பவுசர்கள் மீட்பு

பமுனுகம பகுதியில் உள்ள வாகனங்களை பராமரிக்கும் வளாகத்தில் நிறுத்தி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17,000 லீற்றருக்கும் அதிகமான எரிபொருளுடன் நான்கு பவுசர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பவுசர்கள் வத்தளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் அனுமதி பெற்ற இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்தும் நபர் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த எரிபொருள் பவுசர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு டீசல பவுசர்களும் , பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஏற்றிச் சென்ற இரண்டு பவுசர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பவுசர்களில் 8,800 லீற்றர் டீசல், 4,000 லீற்றர் பெற்றோல் மற்றும் 5,000 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன இருந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உள்ளுர் நிருவாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான வழக்குவிசாரணைகள் நாளை புதன்கிழமை வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதுடன், சந்தேகநபரை குறித்த தினத்தில் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.