நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி இம்மாதம் 17ஆம் திகதிக்குப் பின்னர் மோசமடையும் என தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் நிலவி வருகின்றது. ஏப்ரல் 29 ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்கம் இந்தியாவில் இருந்து டீசல் இறக்குமதி செய்யவில்லை. பெப்ரவரி 21ஆம் திகதி முதல் 95 ஒக்ரேன் பெற்றோல் தட்டுப்பாடு நிலவுகிறது.
மக்களின் குறைகளுக்கு ஜனாதிபதியிடம் பதில் இல்லை. எல்.பி எரிவாயு ஏற்றுமதியை சரியான நேரத்தில் வெளியிடுவதில் அரசாங்கம் தவறிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.