குழந்தையை பிரசவித்த 15 வயது சிறுமி : குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு தலைமறைவு!

-யாழ் நிருபர்-

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி, குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து 15 வயது சிறுமியொருவர், கர்ப்பம் தரித்த நிலையில், தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று வெள்ளிக்கிழமை மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று சனிக்கிழமை காலை முதல் குழந்தை பிரசவித்த சிறுமி மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்