-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செட்டியார்மடம் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுமியே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 21 வயது சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.