14 மாணிக்கக் கற்களை விற்பனை செய்ய முயன்ற 6 பேர் கைது

14 மாணிக்கக் கற்களை 13.5 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் காலி மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணை இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்