13 வயது சிறுவன் கழுத்து வெட்டப்பட்டு கொலை: 19 வயது நண்பன் தலைமறைவு

காரைக்கால் மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளான்.

நிரவி ஒயிட் கவுஸ் காலனியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 13) என்ற சிறுவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளான்.

உயிரிழந்த சிறுவன் நேற்று திங்கட்கிழமை விளையாடச் சென்று நீண்ட நேரம் வீடு திரும்பாத நிலையில் சிறுவனுடைய தாய் அருகில் உள்ள சாகுல் வீட்டுக்குச் சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், கதவு இடுக்கு வழியாக பார்த்த போது அச் சிறுவன் ரத்த வெள்ளத்தில் காணப்பட்டான்.

அதையடுத்து, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து கதவை உடைத்து பார்த்தபோது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சிறுவனின் உடல் கிடந்துள்ளது.

இத்தகவலையறிந்து அங்கு வந்த பொலிஸார் சந்தோஷ் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொலையுடன் சம்மந்தப்பட்ட சாகுல் (வயது 19) என்ற சிறுவனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்