12017 கஞ்சா செடிகளுடன் இருவர் கைது

-பதுளை நிருபர்-

 

தனமல்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊருஹோரா பலஹருவா பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி கஞ்சா பயிர் செய்கையில் ஈடுபட்டிருந்த இருவர் விசேட அதிரடிப் படையினரால்  12017 கஞ்சா செடிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

உடவலவ விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது கஞ்சா தோட்டம் ஒன்றில் 5அடி.1 அங்குலம் உயரமுள்ள 6257 கஞ்சா செடிகளுடன் ஹம்பேகமு பகுதியை சேர்ந்த 55வயதுடைய ஒருவரும் 2அடி 5 அங்குலம் உயரமுள்ள 5760 கஞ்சா செடிகளுடன் ஹம்பேகமு பகுதியை சேர்ந்த 32வயதுடைய மேலும் ஒருவரும் உடவலவ விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றப்பட்டுள்ளதோடு இரு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இரு சந்தேக நபர்களையும் தனமல்வில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்