-பதுளை நிருபர்-
1040 லீற்றர் டீசலுடன் 27 வயதுடைய நபர் ஒருவர் பதுளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பதுளை இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து படல்கும்பரை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் லொறி ஒன்றில் அத்தியாவசிய சேவைகள் என கூறி 1040 லீற்றர் டீசலை பெற்றுக் கொண்டு வெளியே வரும் போது நுகர்வோர் அதிகாரசபையினரால் சோதனைக்கு உட்படுத்திய வேளையில் அத்தியாவசிய சேவைகள் என போலியான முறையில் டீசல் பெற்றுக்கொண்டுள்ளமை இதன் போது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து படல்கும்பரை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்து அவரிடமிருந்த 1040 லீற்றர் டீசலும் கைப்பற்றப்பட்டது.
மேலும், இலங்கை போக்குவரத்து சபையில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திலும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுகர்வோர் அதிகாரசபையினர் கைது செய்யப்பட்ட 27 வயதுடைய நபருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.